கோவையில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் 25-வது கருத்தரங்கம்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் எட்டாவது பிராந்தியத்தின் 25வது மண்டல கருத்தரங்கம் வெள்ளி (இன்று) மற்றும் சனிக்கிழமையன்று கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் உள்ள 8 வேளாண் தட்பவெப்ப மண்டலங்களின் அடிப்படையில் எட்டு பிராந்தியக் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மண்டலங்களின் வேளாண் ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கம் சார்ந்த திட்டங்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமறை விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் எட்டாவது மண்டலத்தின் 24வது பிராந்திய கருத்தரங்கம் கடந்த 2014ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், வேளாண்மை பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கடந்த இரண்டு அண்டுகளாக மேற்கொண்ட பணிகள் குறித்து விவாதிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்து வரக்கூடிய இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.



இன்று தொடங்கிய இந்த நிகழ்வில் எட்டாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு அகிய மாநிலங்களில் அமைந்துள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்திற்குட்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் வனவியல் துறைகளைச் சேர்ந்த துணை வேந்தர்கள், ஆராய்ச்சி இயக்குநர்கள், விரிவாக்கத்துறை இயக்குநர்கள், முதல்வர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.



புதுவை மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் இக்கருத்தரங்கை துவங்கி வைத்தார். மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளரும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரலுமான முனைவர் திரிலோச்சன் மொகபத்ரா தலைமை உரை ஆற்றினார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் இதில் பங்கேற்றனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...