சீனாவில் போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை

சீனாவில் இன்னர் மங்கோலியா பகுதியில் போலீஸ் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் ஜாவோ லிபிங்.

இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், லி என்ற பெண்ணை கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து, பின்னர் உடலை எரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொலை செய்யப்பட்ட பெண், அவரது மனைவி எனவும் கூறப்படுகிறது. ஜாவோ லிபிங்கின் ஊழலை அம்பலப்படுத்தி விடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டியதை தொடர்ந்துதான் இந்த கொலை நடந்திருக்கிறது.

மேலும் ஜாவோ லிபிங் ஊழல் செய்து 2 லட்சத்து 90 ஆயிரம் டாலர் சம்பாதித்ததாகவும், தனது அலுவலகத்தில் சட்ட விரோதமாக 91 டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது ஷான்சி மாகாணத்தில் உள்ள டாய்யுவான் நகரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, ஜாவோ லிபிங் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்.

தொடர்ந்து விசாரணை நடந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.  

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...