தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  சுங்கக் கட்டணம் ரத்தை நீட்டித்து சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சுங்கக் கட்டணம் ரத்து இன்று இரவுடன்  முடிவடையும் நிலையில், சுங்க கட்டணம் ரத்து மேலும் 4 நாட்கள் நீட்டிக்கபடுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரன்சிகள் தட்டுப்பாடு காரணமாக வரும் 18ம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய நெடுஞ்சாலைத்துறை  அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. கால  அவகாசம் எதுவும் கொடுக்காமல் திடீரென அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலான கடைகளில் பழைய நோட்டுக்களை வாங்காததால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை சந்தித்தனர். இதேபோல் தேசிய   நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு   ஊழியர்கள் மறுத்தனர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, நவ.14ம் தேதி வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்   கட்கரி ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தால் இந்த சலுகை 18ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் 4நாட்களுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...