சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த பேருந்துக்கு முறையான ஆவணம் இல்லாததால் பேருந்து சிறைபிடிப்பு

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுலா செல்வதற்காக கேரளா சொகுசு பேருந்தை ஏற்பாடு செய்த நிலையில் வரி செலுத்தாதல், உரிய ஆவணங்கள் இல்லை என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீரென அப்பேருந்தை சிறை பிடித்தனர். இதனால், சுற்றுலா செல்ல ஆவலுடன் பேருந்தில் இருந்த மாணவர்கள் இரவு முழுவதும் சாலையில் காத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் உள்ளது கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இன்ப சுற்றுலா பயணம் என சுமார் 80 பேரிடம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளனர். 

சுற்றுலாவிற்காக கேரளாவுக்கு உட்பட்ட பாலக்காட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேருந்தை கல்லூரி நிர்வாகத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, புதனன்று இரவு 15 நாட்கள் சுற்றுலா என இரு கேரளா சொகுசு பேருந்துகள் கல்லூரிக்கு வந்ததையடுத்து  காத்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆவலுடன் ஏறியுள்ளனர். 

இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக வந்த வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேருந்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் இதுவரை முறையான ஆவணங்கள், பர்மிட் பணம் எதுவும் செலுத்தவில்லை என்று பேருந்தை சிறைபிடித்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சுற்றுலா போகிறோம் என்ற கனவில் இருந்த மாணவ மாணவிகள் பேருந்து இல்லை என்ற ஏக்கத்தில் கவலை அடைந்து சோகத்துடனே காணப்பட்டனர். 

தமிழக- கேரளா எல்லையான எட்டிமடை உள்ளிட்ட பல பகுதியில் கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை கொட்டி வரும் நிலையில் தற்போது முறையான ஆவணங்கள் இன்றி சொகுசு பேருந்துகளையும் இயக்கி வருவது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...