வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு குறித்து சர்வதேச மாநாடு

அதிகரித்து வரும் ஆற்றல் தேவை மற்றும் படிம எரிபொருட்களின் வேகமான மறைவின் காரணமாக நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் இருந்து ஆற்றல் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இவற்றை அடிப்படையாகக் கொண்டு வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு உயிரி செயலூக்கி, உயிரி தயாரிப்பு மற்றும் உயிரி சுத்திகரிப்பு என்னும் சர்வதேச மாநாடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வியாழன் (இன்று) மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ரேடிசான் புளு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கு.ராமசாமி, அமைப்புச் செயலாளர் முனைவர் உ.சிவகுமார் ஆகியோர் தலைமைதாங்க உள்ளனர்.

இந்த மாநாடானது, சர்வதேச   மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களைக் கொண்ட அறிவியல் பூர்வமான மன்றத்தினை வழங்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



மாநாட்டின் ஆய்வுப் பகுதிகளாக உயிரி மற்றும் செல்முறை பொறியியல், உயிரி செயலூக்கி மற்றும் தீவிர நொதி, நொதித்தல் மற்றும் வளர்சிதை மாற்ற பொறியியல் மற்றும் உயிரித் தயாரிப்பு உணவு மற்றும் மருந்து ஆகியவை உள்ளன.

இதில், உலக அளவில் 400 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தியா, ஸ்ரீலங்கா, ரஷ்யா, ஸ்வீடன், அயர்லாந்து மற்றும ஐக்கிய நாடுகளிலிருந்து வரும் பேச்சாளர்கள் வெப்ப மண்டல உயிரிகளின் பயன்பாட்டில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்து பேசவுள்ளனர். 



இந்த சர்வதேச மாநாடானது கல்லூரி, பல்கலைக் கழகம், ஆய்வு நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் இளைய மற்றும் திறமை மிகுந்த ஆய்வாளர்கள் பங்களிப்பதையும், தொடர்புகொள்வதையும் ஊக்குவிக்கிறது.




Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...