தீ குளிப்பதாக மிரட்டிய கணவர் எதிர்பாரா விதமாக தீயில் கருகி பலி


கோவை மாவட்டம், ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (36). இவரது மனைவி சென்பகவள்ளி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

பிரபுவிற்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்துள்ளது. இதனால் கணவர், மனைவி இடையே அவ்வப்போது பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று, பிரபு மது அருந்துவதற்காக சென்பகவள்ளியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததையடுத்து, வீட்டில் இருந்த மண்ணெண்னையை உடலின் மீது ஊற்றிவிட்டு தீ வைத்து பலியாகப் போவதாக பிரபு மிரட்டியுள்ளார். 

இந்நிலையில், அவரது கையில் இருந்த தீப்பெட்டியை அவர் உரசி மிரட்டிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாரா விதமாக தீ பற்றி அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. அவரது சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு கோவை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...