உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி

ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக கழிப்பறை தினம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "யூ அண்ட் ஐ" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இன்று இப்பேரணியை நடத்தியது. இப்பேரணியில், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர்.



இது குறித்து கோவை 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் தலைவர் சோனி அகுஜா பேசுகையில்:- நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் தூய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது. இதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ஹாப்பி பீட்' என்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.



இதில் திறந்த வெளி கழிப்பறை முற்றிலுமாக தடுப்பதற்கும், குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான வகையில் கழிப்பறை வசதி செய்து கொடுப்பது போன்றவற்றையே 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் குறைந்த நபர்களால் தொடங்கப்பட்டு, இன்று இந்தியாவில் 10 நிறுவனங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...