மாநகராட்சி அலுவலகத்தில் சுவச் சர்வேக்ஷன் 2017 கருத்தரங்கு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி கூட்டரங்கில் இன்று காலை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் சார்பில் சுவத் சர்வேக்ஷன் 2017  கருத்தரங்கு நிகழ்ச்சி கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. 



ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் சுவச் சர்வேக்ஷன் கீழ் 500 நகரங்கள் மற்றும் அந்தந்த நகர்ப்புறம், சுகாதார நிலைகள் அடிப்படையில் மதிப்பீட்டு தரவரிசை வழங்கப்படும். இதில் மாநகராட்சி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தூய்மை செய்வதற்காக அப்பகுதிகளுக்கு செய்யப்பட்ட பணிகள் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அப்பகுதிகளை தரவரிசை மதிப்பீடு வழங்கப்படும். 



மேலும், இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள், பாரம்பரியம் மற்றும் சுற்றுலா நகரங்கள், குறைவான ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இருந்து ஜனவரி 2017 இல் நடத்தப்படும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதற்கான ஆய்வில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான நம்ம கோவை அணி, கோ கோயமுத்தூர் அணி, சுவட்ச் பாரத் தூதுவர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இவர்களுக்கு நகரின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுகாதார நிலைகளில், சுத்தமாக வைக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திறந்தவெளி கழிப்பறைகள் பற்றிய பிரச்சாரம் போன்றவற்றை கூட்டத்தில் பேசப்பட்டது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...