'பாம்புகள் நம் தோழன்'- பாம்புகள் பாதுகாப்பு அமைப்பு ரித்திஸின் சில பகிர்வுகள்



மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையது. பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என நமது குழந்தைகளுக்கு பள்ளிக் காலத்தில் இருந்தே பாம்பின் மீதான ஒருவித பயத்தையும் வெறுப்பையும் நாம் கற்றுக்கொடுத்து வருகிறோம். ஆனால், பாம்புகள் கடித்து இறப்பவர்களை விட, பயத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்கின்றது புள்ளிவிபரங்கள். 

பெரும்பாலான மக்கள் பாம்பினை கண்டு அஞ்சி நடுங்கும் இக்காலத்தில் தான், பாம்புகளை சாதாரணமாக கையான்டு அதற்கு பாதுகாப்பினை ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த ரித்திஸ். குடியிருப்பு பகுதியில் புகும் பாம்புகளை அங்கிருந்து மீட்டு வனத்துறையினரின் அனுமதியுடன் அடர்ந்த வனப்பகுதியில் விட்டு வருகிறார் அவர்.



இதுகுறித்து ரித்திஸ் நம்மிடம் கூறுகையில்:-

என் ஊர் கோவை கவுண்டம்பாளையம். தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். நான் சிறு வயதில் இருந்தே உயிரினங்கள் மீது ஆர்வம் கொண்டவனாக இருந்து வருகிறேன். ஆரம்பத்தில் பாம்புகளை பிடித்து வந்தேன். நாளடைவில் அக்கம்பக்கத்தினர் தங்களது பகுதியில் பாம்பு வந்தால் என்னை அழைத்து அதனை பிடிக்குமாறு கூறுவர். அதனை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டுவந்தேன். இதைத்தொடர்ந்து, கடந்த 12 வருடமாக பாம்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். 

எங்கள் அமைப்பில் 30 பேர் உள்ளனர். கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, கரூர், இராமேஷ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் எங்களது குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பாம்புகளுக்கு என முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு எங்களுடையதுதான்.



பாம்புகள் நம் நண்பன்:-

இவ்வுலகில் 2700-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், 80 சதவிகிதம் பாம்புகள் விஷத்தன்மை அற்றது. பாம்புகள் விவசாயியின் நண்பன் எனக் கூறுவர். காரணம், விவசாய நிலத்தில் தானியங்களை அழிக்கும் எலி மற்றும் பூச்சி வகைகளை பாம்புகள் உண்டுவிடும். அப்படி இருந்த போதும் விவசாயிக்கு 70 முதல் 80 சதவிகிதம் தான் கொள்முதல் கிடைக்கும். பாம்புகள் இல்லாமல் போனால் வெறும் 20, 30 சதவிகிதம் மட்டுமே விவசாயி தானியக் கொள்முதல் பெற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அதுபோக பாம்பின் விஷத்தில் இருந்து புற்று நோய் மருந்து, இருதய நோய் மருந்து மற்றும் பக்கவாத மருந்து உள்ளிட்ட பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இப்படி நமக்கு நன்மை செய்யும் பாம்புகள் அழிந்துவிட்டால் மனித இனத்திற்கு பேராபத்து ஏற்படும். இதனால் தான் நாங்கள் பாம்புகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

விஷத்தன்மை:-

புவியின் மேற்பரப்பில் வாழும் பாம்புகளில் 7 வகை பாம்புகளுக்கு மட்டுமே கொடிய விஷத்தன்மை உள்ளது. அவற்றில், நாகம், குழிவிரியன், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ராஜநாகம், சுருட்டை விரியன் உள்ளிட்டவை அடங்கும். மற்ற பாம்புகள் விசத்தன்மை அற்றதாகவோ அல்லது குறைவான விஷத்தன்மை உடையதாகவோ உள்ளது. அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், பாம்பை எங்கு கண்டாலும் அதனை அடித்து கொலை செய்வதைத் தவிர வேரெதுவும் மக்கள் செய்வது இல்லை. அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். மக்களிடம் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தான் இதுபோன்று நடக்கிறது.



முதலுதவி:-

பாம்பு சாதாரணமாக நம்மைக் கடிக்காது. அதற்கு இடையூறு ஏற்படுத்தும் போதுதான் அது நம்மை தாக்குகின்றன. பாம்பு கடித்தால் உடனடியாக அந்த பகுதியினை ஆண்டிபயாடிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். 

மூடநம்பிக்கைகள்:-

பாம்பு படம் எடுத்து ஆடுவது, மகுடிக்கு ஆடுவது, பால் குடிப்பது, பழி வாங்குவது உள்ளிட்டதை நம் மக்கள் உண்மை என கருதுகின்றனர். இவை அனைத்தும் மூட நம்பிக்கைகள். பாம்புக்கு காதுகள் இல்லை. அதிர்வுகளை மட்டுமே கொண்டு செயல்படக்கூடியது. அதனால் மகுடிக்கு ஆடுவதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் செயல். 

பாம்புக்கு சீரண சக்தி குறைவு. இதனால், பாலைக் குடிக்காது. முட்டை மற்றும் மாமிசங்களை உண்ணும். பாம்புகளை சீண்டும் போது அது தனது கோபத்தை வெளிப்படுத்த தன் தலையை தூக்கி ஆட்டும். ஆனால், அதனை படம் எடுப்பது, மனதில் வைத்து பழிவாங்கிவிடும் என நம் முன்னோர்கள் கூறி வருகின்றனர். அப்படி எதுவும் இல்லை என நம் மக்கள் உணர வேண்டும்.



பயப்படாதீர்கள் :-

பாம்பு உங்கள் வீட்டிற்கோ, தோட்டத்திற்கு அல்லது உங்கள் அருகில் வந்தாலோ பயப்படாதீர்கள். பாம்பு பிடிக்க கைதேர்ந்தவர்கள், வனத்துறையினரை அழையுங்கள். பாம்புகள் தங்கும் அளவிற்கு நமது வீட்டின் சூழ்நிலையை உருவாக்காதீர்கள். எலி, தவளை, பூச்சிகள் போன்ற உயிரினங்கள் வாழ ஏற்ற சூழலை அமைப்பதுதான் பாம்புகள் வீட்டிற்கு வர முக்கிய காரணம். வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். 

நிதி உதவி:-

இதுவரை யாரிடமும் பாம்பை பிடிக்க நிதியுதவி பெற்றதில்லை. பாதுகாக்கப்பட்ட பாம்பை தக்க இடத்தில் கொண்டு சேர்ப்பதற்கான போக்குவரத்து செலவுகள் மட்டுமே வாங்கி வருகிறோம். குடிசைப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பாம்புகளை பிடிப்பதற்கு அதுவும் பெறுவதில்லை. பிடித்த பாம்பை வனத்துறையினரின் உதவியுடன் அவர்கள் கூறும் வனப்பகுதிக்கு சென்று விட்டுவிடுவோம்.

ஒரு இடத்தில் பாம்பு பிடிக்க செல்லும் போதும், அதனை வனப்பகுதிக்குள் விட செல்லும் போதும் எங்களுக்கு பல செலவுகள் ஏற்படுகிறது. இதற்கு அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் உதவிசெய்ய முன்வந்தால் நன்றாக இருக்கும். 

எங்களது பாம்பு மீட்பு குழுவின் 9787332814 என்ற அழைபேசி எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் அழைத்தால் அருகில் இருக்கும் எங்களது குழுவினரை அனுப்பி வைப்போம்'' இவ்வாறு ரித்திஸ் கூறினார்.

இதுபோன்று பொதுமக்களிடம் இருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், படிப்படியாக அழிந்துவரும் பாம்புகள் மீது தனிக் கவணம் செலுத்தி அதனை பாதுகாத்து வரும் தன்னார்வலர்களுக்கு அரசு உதவி செய்தால் இயற்கை சூழல் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...