வர்தா புயல்; அரக்கோணத்தில் இருந்து சென்னை விரைந்துள்ளது பேரிடர் மீட்பு குழு

அதிதீவிர, 'வர்தா' புயல் சென்னை அருகே நாளை மதியம் கரையை கடக்க உள்ளதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழு சென்னை விரைந்துள்ளது. குறிப்பாக வட சென்னையில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம் பகுதிகளுக்கும் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு குழுவிற்கு, 50 பேர் என, ஐந்து குழுக்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்க கடலில் உருவான, 'வர்தா' புயல், இன்று காலை, 5:30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து, 450 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல், தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை இடையே நாளை மதியம் கரையை கடக்க கூடும். அப்போது மணிக்கு, 70 கி.மீ., முதல், 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...