பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததைக் கண்டித்து தனியார் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்


கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் அமைந்துள்ளது பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறும்.

இக்கொண்டாட்டத்தில், உரியடித்தல், சிலம்பாட்டம், மேளதாளத்துடன் கலை நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் மாட்டு வண்டி வளம் வருதல் உள்ளிட்டவை நடைபெற்று பொங்கல் வைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடுவர்.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, இக்கல்லூரி நிர்வாகத்தினரும் கல்லூரி வளாகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததாக கூறப்படுகிறது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் நுழைவு வாயிலின் முன்பு திரண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...