கோவையை புரட்டி எடுத்த இளைஞர்களின் புரட்சி போராட்டம்!


கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டம் வ.உ.சி மைதானத்தில் மாபெரும் எழுச்சி பெற்றுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒருபகுதியாக கோவையில் ஜல்லிக்கட்டிற்காக பல்வேறு தரப்பின் ஆதரவு அளித்தும் கோவையில் முழுக்கடையடைப்பு நடைபெற்றது. இதன் மையமாக நேற்றிரவு வ.உ.சி மைதானத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.



நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாணவர்கள் எழுச்சி கூட்டதிற்கு பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வருகின்றனர். பணிக்கு செல்பவர்களும் தங்களின் ஆதரவினை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். மேலும், இளைஞர்கள் மோடி போன்ற உருவம் சித்தரித்து அதனை போராட்டகளத்தில் கொண்டு வந்தும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தும், பறை இசைகளிலும், சிறுவர் சிறுமியர் கம்பு சுத்தியும், சிறுவர்கள் ஒலிபெருக்கியின் மூலமாகவும் ஜல்லிகட்டிற்கு ஆதரவாகவும் பேசியும் பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தனர். மேலும் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



ஐந்தாவது நாளாக தொடரும் இந்த எழுச்சி போராட்டத்தில் மாணவர்கள் சாலைகளின் அமர்ந்தும் போராடி வருகின்றனர். மேலும் பெண்கள் சிலர் போராட்டத்தின் போது மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான முதலுதவிகளும் மைதானத்தின் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசரகட்டத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...