மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவை: மாநில அளவிலான சப்-ஜூனியர் பேட்மிட்டன் போட்டிகள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.


கோவை: மாநில அளவிலான சப்-ஜூனியர் பேட்மிட்டன் போட்டிகள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.

கோயம்புத்தூர் பேட்மிட்டன் அசோசியேசன் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 1300-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.



நேற்று நடந்த கால் இறுதிப்போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரண்டு விதமாக நடைபெறுகின்றன.



இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter