ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டி : 6-1 என்ற கோல் கணக்கில் ஷில்லாங் லஜாங்கை பந்தாடியது சென்னை அணி

கோவை : ஹீரோ ஐ-லீக் கால்பந்து தொடரில் ஷில்லாங் லஜாங் அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

கோவை : à®¹à¯€à®°à¯‹ ஐ-லீக் கால்பந்து தொடரில் ஷில்லாங் லஜாங் அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்து தோல்வியை சந்திக்காத சென்னை அணி, கடந்த ரியல் காஷ்மீர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நிலையில், ஷில்லாங் லஜாங் அணியை எதிர் கொண்டது. 



கோவை நேரு மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சென்னை அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் 12வது நிமிடத்தில் நெஸ்ட்டர் ஜீசஸ் முதல் கோல் அடித்து சென்னை அணி முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து, ரோபர்ட்டோ தலையால் முட்டி மேலும் ஒரு கோலை அடித்து அசத்தினார். இதனால், முதல் பாதி ஆட்டத்தின் முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை பெற்றது. 



பின்னர், நடந்த 2-வது பாதி ஆட்டத்திலும் சென்னை அணியின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 49-வது நிமிடத்தில் பெட்ரோ ஜாவியர் 3-வது கோலை அடித்தார். தொடர்ந்து, ஷில்லாங் லஜாங் அணியின் சாமுவேல் ஒரு கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். இதைத் தொடர்ந்து, கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சென்னை அணியினர் அடுத்தடுத்து கோல்களை அடித்து ரசிகர்களை அமர்க்களப்படுத்தினர். போட்டியின் இறுதியில், 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 3 கோல்களை அடித்து அசத்திய பெட்ரோ ஜாவியர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Newsletter