13-வது தேவராஜுலு நினைவு கூடைப்பந்துப் போட்டி : பி.எஸ்.ஜி. சர்வாஜனா, ஸ்டேண்ஸ் அணிகள் வெற்றி

கோவை : 13-வது தேவராஜுலு நினைவு கூடைப்பந்துப் போட்டியில் முதல்சுற்றில், பி.எஸ்.ஜி. சர்வாஜனா, ஸ்டெண்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.


கோவை : 13-வது தேவராஜுலு நினைவு கூடைப்பந்துப் போட்டியில் முதல்சுற்றில், பி.எஸ்.ஜி. சர்வாஜனா, ஸ்டெண்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. 

கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டித் தொடரில், கோவை மாநகரில் இருந்து 28 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், பி.எஸ்.ஜி. சர்வாஜனா, ஸ்டேண்ஸ் அணிகள் உள்பட 12 அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளன. 



டெக்ஸ்சிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 32-82 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பி.எஸ்.ஜி. சர்வாஜனா அணி தோற்கடித்தது. மற்றொரு போட்டியில், ஸ்டேண்ஸ் அணி 68-64 என்ற கணக்கில் கோல்டன்சிட்டி அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக கோல்டன்சிட்டி அணியின் கோகுல் 19 புள்ளிகள் எடுத்தார். 



2-வது சுற்றுக்கானப் போட்டிகள் மாநகராட்சிக்கு சொந்தமான கூடைப்பந்து மைதானத்தில் இன்று நடக்கிறது. இத்தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கு சுமார் ரூ. 50,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகிறது.

Newsletter