சர்வேதச டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு : மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் விராட் கோலி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு சாதனையை இந்திய அணி படைத்தது. இதன்மூலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக வீழ்த்திய இந்திய அணி என்ற பெருமையையும் கோலி தலைமையிலான அணி பெற்றது. 

இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். இதேபோல, புஜாரா முதல்முறையாக 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், விக்கெட் கீப்பரான இளம்வீர்ர் ரிஷப் பந்த், 21 இடங்கள் முன்னேறி, 17-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், சிறந்த டெஸ்ட் தரவரிசையை பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றிருந்த வீரர் ஃபரூக் என்ஜினியரின் (17-வது இடம்) சாதனையை சமன் செய்துள்ளார். இந்திய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பர் தோனி 19-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல, பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில், ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்துவீசி குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி, 45-வது இடத்தையும், பும்ரா 16-வது இடத்தையும், முகமது சமி ஒரு இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

அணிகளுக்கான தரவரிசையில், இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. 5வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணி ஒருபுள்ளிகளை மட்டும் இழந்துள்ளது. 

Newsletter