கோவையில் ஹீரோ 'ஐ-லீக்' கால்பந்தாட்ட போட்டி : சென்னை அணி வெற்றி

கோவை : ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடருக்கான போட்டியில், சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியினை வென்றது.

கோவை : ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடருக்கான போட்டியில், சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியினை வென்றது.



இந்தியாவில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ஹீரோ 'ஐ-லீக்' தொடரில் 12வது சீசன் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நேற்று, நேரு மைதானத்தில் விறுவிறுப்பான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. 



இந்த போட்டியில், சென்னை சிட்டி, மோகன் பகான் அணிகள் மோதின. இதில், தொடக்கத்திலிருந்தே தனது அபாரமான ஆட்டத்திறமையை வெளிப்படுத்திய சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியினை வென்றது.



சென்னை அணி சார்பில், 8வது நிமிடத்தில் நெஸ்டர் ஜீசஸ், 15வது நிமிடத்தில் சான்டிரோ ரோட்ரிக்ஸ், 23வது நிமிடத்தில் பெட்ரோ மான்ஜி ஆகியோர் ஒரு கோலடித்தனர். இதனிடையே, மோகன் பகான் அணிக்கு வில்லியம் லால்னுன்பெலா என்ற வீரர் 37வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 



இதுவரை விளையாடிய போட்டிகளில் 40 புள்ளிகளுடன் சென்னை அணி முன்னிலை வகிக்கிறது. சென்னை அணியினை சேர்ந்த நெஸ்டர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

Newsletter