13வது மேஜர் தயான் சந்த் நினைவு கோப்பைக்கான ஹாக்கி லீக் போட்டிகள் தொடக்கம்

கோவை : பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியின் ஹாக்கி கிளப் சார்பில், பொறியியல் கல்லூரிகளுக்கிடையில் 13வது மேஜர் தயான் சந்த் நினைவு கோப்பைக்கான, ஹாக்கி லீக் போட்டிகள் கல்லுாரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில், பல்வேறு கல்லூரியை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகள் அனைத்தும் லீக் முறைப்படி நடத்தப்படும். இதனை முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

நேற்று நடந்த முதல் போட்டியில், நீலம்பூர் ஸ்ரீசக்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி அணி காரமடை ஸ்ரீசக்தி தொழில்நுட்ப கல்லூரி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

இதனைத் தொடர்ந்து, 2வது நடைபெற்ற போட்டியில், என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லூரி அணி மற்றும் பார்க் தொழில்நுட்ப கல்லூரி அணிகள் மோதியதில், பார்க் அணியை 4-0 என்ற கோல் கணக்கில், என்.ஜி.பி., அணி வென்றது. 

Newsletter