மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி : முதல் வெற்றியைப் பதிவு செய்த பி.பி.ஜி.,ஐ.டி மற்றும் சி.ஐ.டி., அணிகள்

கோவை : மேஜர் தயான் சந்த் நினைவு மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் பி.பி.ஜி.,ஐ.டி மற்றும் சி.ஐ.டி., அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்தன.

கோவை : மேஜர் தயான் சந்த் நினைவு மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் பி.பி.ஜி.,ஐ.டி மற்றும் சி.ஐ.டி., அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்தன.



பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் மைதானத்தில் போட்டி தொடரின் 2-வது நாள் ஆட்டத்தில் பி.பி.ஜி.,ஐ.டி கல்லூரி அணி, இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில், டிவைன் ஆண்டோன் 3 கோல்கள் அடித்து அசத்த, பி.பி.ஜி.,ஐ.டி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 



இதே போல, சி.ஐ.டி., கல்லூரி, என்.ஜி.பி., கல்லூரிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் சார்பில் எட்வின் 2 கோல்களை அடித்தார்.



மற்றொரு தகுதி சுற்றுப் போட்டியில் ஶ்ரீ சக்தி தொழில்நுட்பக் கல்லூரி, குமரகுரு கல்லூரி அணிகளுக்கு இடையிலான ஆட்டமும், கற்பகம் பொறியியல் கல்லூரி அணியும், சக்தி பொறியியல் கல்லூரி அணிகளுக்கு இடையிலான் ஆட்டமும் சமன் அடைந்தது.

Newsletter