13-வது டெக் ஹாக்கி கோப்பையை முகர்ந்தது கொங்கு பொறியியல் கல்லூரி

கோவை : மேஜர் தயான் நினைவு கோப்பை ஹாக்கி போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த கொங்கு பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை : மேஜர் தயான் நினைவு கோப்பை ஹாக்கி போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த கொங்கு பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.



மேஜர் தயான் நினைவாக பி.எஸ்.ஜி., டெக் ஹாக்கி கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டன. 6 நாட்கள் நடைபெற்ற லீக் போட்டியின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகிள் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியின் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. 



இதில், கொங்கு பொறியியல் கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, பி.பி.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய அணிகள் சூப்பர் லீக் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை 3-0 என்ற கோல் கணக்கிலும், கோவை தொழில்நுட்பக் கல்லூரியை 5-1 என்ற கோல் கணக்கிலும், பி.பி.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி 5-0 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்த கொங்கு பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 



இதைத் தொடர்ந்து, பி.பி.ஜி. கல்லூரி மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுமார் 25,000 மதிப்புள்ள பரிசுகளை பாரதியார் பல்கலைக்கழக அணியின் முன்னாள் கேப்டனும், பழனியைச் சேர்ந்த ஆதித் ப்ளூ மெட்டல்ஸ் நிர்வாக இயக்குநருமான எஸ். கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

Newsletter