மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி : போத்தனூர் கால்பந்து கிளப் அணி அசத்தல் வெற்றி

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், சி.ஐ.ஆர்.எஸ். கால்பந்து அணியை 1-2 என்ற கோல் கணக்கில் போத்தனூர் கால்பந்து கிளப் அணி வெற்றி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், சி.ஐ.ஆர்.எஸ். கால்பந்து அணியை 1-2 என்ற கோல் கணக்கில் போத்தனூர் கால்பந்து கிளப் அணி வெற்றி பெற்றது. 



சி டிவிசன் பிரிவில் நடந்த இந்தப் போட்டி கார்மெல் கார்டன் பள்ளி மைதானத்தில் அரங்கேறியது. ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய போத்தனூர் கால்பந்து கிளப் அணிக்கு சசிக்குமார் 23-வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் சி.ஐ.ஆர்.எஸ். கால்பந்து அணியின் சார்பில் சித்தீஷ் கோல் அடித்து, போட்டியை சமன் செய்தார். 



இருப்பினும், தொடர்ந்து போராடிய போத்தனூர் அணிக்கு 44-வது நிமிடத்தில் சசிக்குமார் மீண்டும் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம், 2-1 என்ற கோல் கணக்கில் போத்தனூர் அணி வெற்றி பெற்றது. 



இதேபோல, சி டிவிசனில் நடந்த மற்றொரு போட்டியில் அத்யாயனா எஃப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் எம்.ஆர். எஃப்.சி அணியை வீழ்த்தியது.

Newsletter