சி.டி.சி.ஏ. கால்பந்து போட்டி : மதுக்கரை யு.எஃப்சி அணிக்கு தொடர் வெற்றி

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கம் நடைபெற்று வரும் போட்டி தொடரில் மதுக்கரை யு.எஃப்சி அணிக்கு தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கோவை : கோவை மாவட்ட கால்பந்து சங்கம் நடைபெற்று வரும் போட்டி தொடரில் மதுக்கரை யு.எஃப்சி அணிக்கு தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.



கார்மெல் கார்டன் மைதானத்தில் சி டிவிசனில் நடைபெற்ற போட்டியில் மதுக்கரை யு.எஃப்சி மற்றும் எம். ஆர் கால்பந்து கிளப் அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில், 1-0 என்ற கோல் கணக்கில் மதுக்கரை யு.எஃப்சி வெற்றி பெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை நடந்த லீக் போட்டியில், 5-0 என்ற கோல் கணக்கில் வாகா எஃப்சியை மதுக்கரை யு.எஃப்சி வீழ்த்தியிருந்தது.



இதேபோல, சனிக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் போத்தனூர் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வாகா எஃப்சியை தோற்கடித்தது.

Newsletter