டாஸ்மாக் கடைகளை முட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகை போராட்டம்


கோவை: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மண்டல டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100 க்கும்  மேற்பட்டோரை  காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.



தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள  மண்டல டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.




இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளி முள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



இதனை தொடர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டயமாக இழுத்துச் சென்று போலிசார் கைது செய்தனர்.




இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.


Vehicles Without E-Pass Denied Entry to Valparai

Forest Department enforces strict e-pass requirement at Aliyar checkpost for Valparai-bound vehicles. Only 750 vehicles...

Wild Elephant Bahubali Spotted Crossing Mettupalayam-Ooty Road

A lone wild elephant known as Bahubali suddenly crossed the Mettupalayam-Ooty road last night, causing panic among vehic...

Heavy Night Rain in Coimbatore Causes Waterlogging and Public Distress

Coimbatore experienced heavy rainfall for over an hour yesterday evening, leading to severe waterlogging in several area...

Elephant Chase Leaves Tea Vendor Critically Injured Near Velliangiri Foothills

A tea vendor named Arusamy was critically injured after being chased by an elephant near Mullangadu Check Post at Vellia...

Agriculture Department Warns Strict Action Against Fertilizer Sales Violations in Coimbatore

Coimbatore's Joint Director of Agriculture announces adequate fertilizer stock of 12,522 metric tons for upcoming summer...

“No Support to TVK”: IUML Denies Backing Vijay

IUML denied extending support to TVK hours after reports claimed Vijay had secured majority backing and was set to take...