வைகோ எந்த தொகுதியிலும் போட்டியிட போவதில்லை

எந்த தொகுதியிலும்  போட்டியிட போவதில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தர்.

கோவையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வைகோ கூறியதாவது:

என் வாழ்நாள் முழுவதும் இனி பச்சை துண்டு மட்டுமே அணிவேன். மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பகுதியில் மே தின விழா கொண்டா உள்ளோம். இந்த கூட்டத்தில் 6 கட்சி தலைவர்களும் கலந்து கொள்வோம்.

இதனைத் தொடர்ந்து மே-2 ம் தேதி பல்லடம் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநாடு நடத்த உள்ளோம். குறிப்பாக இம்மாநாட்டில் எந்தவிதமான கட்சி கொடிகளுக்கும் அனுமதி இல்லை. தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விளம்பர பலகைகளுக்கு அனுமதி இல்லை.

இந்த மாநாடு முழுக்க முழுக்க விவசாயிகளின் பிரச்னைகளை களைய மட்டுமே நடத்தப்படுகிறது.

இதில் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

இதனையடுத்து, கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடாதது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வைகோ, நான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது இரு சமூகத்தினரிடையே சாதிக் கலவரம் உருவாக்க திமுக திட்டமிட்டிருப்பதாக, திமுகவில் உள்ள தன் நலம்விரும்பிகள் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், வைகோ தேர்தலில் போட்டியிடாதது குறித்து மற்ற ஐந்து தலைவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்ததாகவும், அவர்கள் வைகோவின் முடிவினை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா பிரச்சார வாகனம், போலியான 108 அவசர ஊர்தி வாகனங்கள், அதிமுக அமைச்சர்களின் வாகனங்கள் ஆகியவற்றில் தான் பணம் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு பணப் பட்டுவாடா நடப்பதாக வைகோ அப்போது குற்றம் சாட்டினார்.

Daring Theft Caught on CCTV: Youth Steals Rs 3,500 from Chicken Shop Cash Box in Coimbatore

A young man stole Rs 3,500 from a chicken shop's cash box in Kovilpaalayam, Coimbatore, while the owner was busy outside...

Vehicles Without E-Pass Denied Entry to Valparai

Forest Department enforces strict e-pass requirement at Aliyar checkpost for Valparai-bound vehicles. Only 750 vehicles...

Wild Elephant Bahubali Spotted Crossing Mettupalayam-Ooty Road

A lone wild elephant known as Bahubali suddenly crossed the Mettupalayam-Ooty road last night, causing panic among vehic...

Heavy Night Rain in Coimbatore Causes Waterlogging and Public Distress

Coimbatore experienced heavy rainfall for over an hour yesterday evening, leading to severe waterlogging in several area...

Elephant Chase Leaves Tea Vendor Critically Injured Near Velliangiri Foothills

A tea vendor named Arusamy was critically injured after being chased by an elephant near Mullangadu Check Post at Vellia...

Agriculture Department Warns Strict Action Against Fertilizer Sales Violations in Coimbatore

Coimbatore's Joint Director of Agriculture announces adequate fertilizer stock of 12,522 metric tons for upcoming summer...