கோவை: தாராபுரம் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பணிபுரிந்து வந்த காயத்ரி டி.எஸ்.பி. ஜெரீனாபேகம் டாரச்சர் காரணமாக விசம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர காயத்ரி. இவரது கணவர் ஆறுமுகம், துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். தாராபுரம் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பணிபுரிந்து வந்த காயத்ரி, இந்நிலையில் தேர்தல் சிறப்பு பணி காரணமாக தாராபுரம் டி.எஸ்.பி. ஜெரீனாபேகத்தின் கீழ் கடந்த 15 நாட்களாக பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் டி.எஸ்.பி. ஜெரினா பேகத்தின் தொடர் டார்ச்சர் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று இரவு காவல் நிலையத்திலேயே காயத்ரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாதாக காயத்ரியின் கணவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காயத்ரியின் உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டடு, காயத்ரியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.