கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாடகை கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவை: கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாடகை கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டவுடன், அப்பகுதியில் இருந்த டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஊழியர்களின் உதவியுடன் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், விமான நிலைய நுழைவாயில் பகுதியில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.