கோவையில் மாடுகளுக்கு இலம்பி தோல் நோய் பரவல்; போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மாவட்டத்தில் மாடுகளுக்கு ‘இலம்பி’ தோல் நோய் வேகமாக பரவி வருவதால், மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம், விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கௌசிகா நதி பாதுகாப்பு அமைப்பு மற்றும் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம்


கோவை: கோவை மாவட்டத்தில், குறிப்பாக வடக்கு பகுதிகளில் மாடுகளிடையே இலம்பி தோல் நோய் (Lumpy Skin Disease) வேகமாக பரவி வருவதாகவும், இதை கட்டுப்படுத்த உடனடி முன்னெச்சரிக்கை மற்றும் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கௌசிகா நதி பாதுகாப்பு அமைப்பு மற்றும் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கௌசிகா நதி பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அக்ரி பாலகிருஷ்ணன் மற்றும் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலம்பி தோல் நோய் ஒரு வைரஸ் தொற்று நோயாகும். ஈ, கொசுக்கள் மற்றும் பால்கறக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் மூலமாகவும் எளிதில் பரவும் தன்மை கொண்டது என தெரிவித்துள்ளனர்.

மேலும், நாட்டு மாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதுடன், கன்றுகளில் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளதாகவும், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, மாவட்டம் முழுவதும் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் விரைந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நோய் பாதித்த மாடுகளுக்கு தேவையான மருந்துகள், களிம்புகள் மற்றும் மருத்துவப் பொடிகள் உள்ளிட்ட சிகிச்சைப் பொருட்கள் அனைத்தும் கிராமப்புற கால்நடை மருத்துவமனைகளில் போதுமான அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Coimbatore Corporation Vaccinates 1,022 Street Dogs Against Rabies in Single Day

Coimbatore Corporation and animal welfare NGOs jointly conducted a mega anti-rabies vaccination drive on January 11, 202...

Coimbatore Corporation Commissioner Inspects Sports Facilities Ahead of Junior Hockey Championship

Coimbatore Corporation Commissioner Katta Ravi Theja IAS inspected R.S.Puram Hockey Ground, Nehru Indoor Stadium, and Kr...

Sri Ramakrishna Engineering College Alumni Donate Rs 30 Lakh at Silver Jubilee Reunion

The 25th-year silver jubilee reunion of 2001 graduates from Sri Ramakrishna Engineering College, Vattamalaipalayam, Coim...

Lumpy Skin Disease Spreading Among Cattle in Coimbatore; Immediate Preventive Measures Urged

Representatives of Kousika River organisations have urged the Animal Husbandry Department to immediately launch vaccinat...

Amaravathi Dam Water Level Rises to 48.07 Feet - Thirumoorthy Dam at 29.59 Feet

Amaravathi Dam in Tiruppur district recorded a water level of 48.07 feet as of July 11, while Thirumoorthy Dam stands at...

Coimbatore Corporation Mandates Anti-Dengue Measures at Construction Sites

The Coimbatore City Municipal Corporation has directed construction firms and private building owners to strictly implem...