வரும் அக்., 9 முதல்‌ 12074 கிளார்க்‌ காலி பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு : மாவட்ட ஆட்சியர்‌

கோவை : ஐபிபிஎஸ்(IBPS) மூலம்‌ 12074 கிளார்க்‌ பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : ஐபிபிஎஸ்(IBPS) மூலம்‌ 12074 கிளார்க்‌ பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்விற்கு இணையதளம்‌ மூலமே விண்ணப்பிக்க முடியும்‌. இத்தேர்விற்கான இணையதள பதிவு 17.09.2019 முதல்‌ தொடங்கப்பட்டுள்ளது. மேலும்‌ இதற்கான Prelims தேர்வு வரும் 07.12.2019, 08.12.2019, 14.12.2019, 21.12.2019. நாட்களில் நடைபெறுகிறது. Main தேர்வு அடுத்த வருடம் ஜனவரி 19ம் தேதி நடைபெறும்‌.

இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள்‌ தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ வரும் 9ம் தேதி முதல்‌ இலவச பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பிற்கு மனுதாரர்கள்‌ கட்டணம்‌ எதுவும்‌ செலுத்தத்‌ தேவை இல்லை. இந்த இலவச பயிற்சி வகுப்பில்‌, பாடக்குறிப்புகள்‌ வழங்கப்படுவதுடன்‌ குழு விவாதம்‌, பாடவாரியாக வகுப்புகள்‌ மற்றும்‌ மாதிரித்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட்டு தேர்வில்‌ தேர்ச்சிபெற அனைத்து வழிவகைகளும்‌ செய்யப்படுகிறது. ஆகவே போட்டித்தேர்வு எழுதி வங்கியில்‌ வேலைவாய்ப்பு பெற விரும்பும்‌ விண்ணப்பதாரர்கள்‌ இவ்வாய்ப்பினைப்‌ பயன்படுத்தி இத்தேர்விற்கு விண்ணப்பித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மைய வளாகத்தில்‌ நடைபெறவுள்ள இப்பயிற்சி வகுப்புகளில்‌ கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள்‌, விண்ணப்பித்தற்கான ஆதாரம்‌ மற்றும்‌ புகைப்படத்துடன்‌ விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்‌. இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு தேர்வில்‌ தேர்ச்சி அடைந்து வேலைவாய்ப்பு பெற்று பயன்‌ அடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...