வரும் டிச., 2ம் தேதி முதல் மின் பகிர்மான வட்டங்களின்‌ கேங்மேன்‌ (பயிற்சி) பதவிக்கான சான்றிதழ்‌ சரிபார்ப்பு பணி

கோவை: கோவை மாவட்டம்‌, வடக்கு மற்றும்‌ தெற்கு மின் பகிர்மான வட்டங்களின்‌ கேங்மேன்‌ (பயிற்சி) பதவிக்கான சான்றிதழ்‌ சரிபார்ப்பு பணி வரும் டிசம்பர்‌ 2ம்‌ தேதி முதல்‌ 12ம்‌ தேதி வரை நடைபெறவுள்ளதாக கோவை மண்டல பகிர்மானம்‌ தலைமைப்‌ பொறியாளர்‌ (பொறுப்பு) ஜெ.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்டம்‌, வடக்கு மற்றும்‌ தெற்கு மின் பகிர்மான வட்டங்களின்‌ கேங்மேன்‌ (பயிற்சி) பதவிக்கான சான்றிதழ்‌ சரிபார்ப்பு பணி வரும் டிசம்பர்‌ 2ம்‌ தேதி முதல்‌ 12ம்‌ தேதி வரை நடைபெறவுள்ளதாக கோவை மண்டல பகிர்மானம்‌ தலைமைப்‌ பொறியாளர்‌ (பொறுப்பு) ஜெ.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து கோவை மண்டலப்‌ பகிர்மானம்‌ தலைமைப்‌ பொறியாளர்‌ (பொறுப்பு) அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:

கோவை மாநகர்‌, வடக்கு மற்றும்‌ தெற்கு மின் பகிர்மான வட்டங்களில்‌ கேங்மேன்‌ (பயிற்சி) பதவிக்கான 2104 நபர்களுக்கு சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ உடற்தகுதித்‌ தேர்வு அஞ்சல்‌ பெட்டி எண்.2940, மேற்கு பவர்‌ ஹவுஸ்‌ சாலை, டாடாபாத்‌, கோவை-641012 என்ற முகவரியில்‌ உள்ள தலைமைப்பொறியாளர்‌, கோவை மண்டலம்‌ அலுவலக வளாகத்தில்‌ வரும்‌ டிசம்பர்‌ 2-ஆம்‌ தேதி முதல்‌ 12-ஆம்‌ தேதி வரை காலை 8 மணி முதல்‌ மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இப்பதவிக்கு இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பித்தவர்கள்‌ மின்னஞ்சல்‌ மூலம்‌ பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும்‌ சரிபார்ப்பு பட்டியலின்படி அனைத்து ஆவணங்களுடன்‌ நிர்ணயிக்கப்பட்ட நாள்‌ மற்றும்‌ நேரத்தில்‌ ஆவணங்களுடன்‌ தவறாமல்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.

எனவே, விண்ணப்பதாரர்கள்‌ புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டை மற்றும்‌ சான்றிதழ்கள்‌, கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட மாற்றுச்‌ சான்றிதழ்‌, மதிப்பெண்‌ பட்டியல்‌(5,8 மற்றும்‌ 10ம்‌ வகுப்பு ஏதாவது ஒன்று இருக்கவேண்டும்‌), சாதிச்‌ சான்றிதழ்‌, மாற்றுத்திறனாளி சான்றிதழ்‌, பண்பு மற்றும்‌ ஒழுக்க சான்றிதழ்‌( கடைசியாக பயின்ற கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஒன்றும்‌ மற்றும்‌ அதிகாரம்‌ பெற்ற அலுவலரிடம்‌ பெற்ற சான்று ஒன்றும்‌, வேலை வாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்யப்பட்டிருந்தால்‌ அதன்‌ பதிவு அட்டை மற்றும்‌ அனைத்து சான்றிதழ்களின்‌ சுய சான்றொப்பமிட்ட நகலுடன்‌ அசல்‌ சான்றிதழ்களையும்‌, சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு தவறாமல்‌ கொண்டு வந்து உடற்தகுதித்‌ தேர்வில்‌ கலந்து கொள்ளலாம்‌. என கோவை மண்டலப்‌ பகிர்மானம்‌ தலைமைப்‌ பொறியாளர்‌(பொறுப்பு) தெரிவித்தார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...