கோவைக்கு 230 மின்சார பேருந்துகள் தேவை: டெண்டர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

கோவை: சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களிலும் மின்சார பேருந்து தேவையை அறிந்து அதன்படி டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்படும் என தகவல் வெளியானது.

அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, மாவட்ட வாரியாக மின்சார பேருந்துகளின் தேவைகள் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் அதற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதில், கோவைக்கு கோட்டத்திற்கு 230 மின்சார பேருந்துகள் தேவை என முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: 

"9 மீட்டர் மின்சார பேருந்துகள் 40, 12 மீட்டர் மற்றும் 2x2 இருக்கை வசதி கொண்ட மின்சார பேருந்துகள் 30, 12 மீட்டர் 3x2 இருக்கை வசதி பேருந்துகள் 160 தேவை என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் அரசின் ஒப்பிதல் பெற்ற பிறகு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டெண்டர் அறிவிக்கப்படும்," என்றார்.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் சார்பாக மொத்தமாக 1075 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற, இதில் 750 பேருந்துகள் டவுன் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...