2021 சர்வதேசத்‌ திறன்‌ போட்டி: வரும் ஜனவரி 23ம் தேதி முதல் மாவட்ட அளவிலான திறன்‌ போட்டிகள் - கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக திறனறியும் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்த இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான திறன்‌ போட்டிகளில்‌ பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக திறனறியும் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்த இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான திறன்‌ போட்டிகளில்‌ பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டு இளைஞ்சர்கள் தங்களது தொழில்கிறன்களையும்‌, திறமையையும்‌ வெளிப்படுத்தும்‌ வகையில்‌, சீனாவில்‌ உள்ள ஷாங்காய்‌ நகரில் 2021 செப்டம்பர்‌ மாதம்‌ நடைபெறவுள்ள சர்வதேச திறன்‌ போட்டியில்‌ பங்கேற்க ஏதுவாக https://worldskillsindia.co.in/worldskill/world/ à®Žà®©à¯à®± இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இறுதி நிலையில்‌ நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன்‌ போட்டிகளில்‌ பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்‌.

இதன்‌ முதற்கட்டமாக தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்‌ தகுதி நிலையை கண்டறிய முன்‌ போட்டி தேர்வு (Screening Test) 20.01.2020 முதல்‌ 22.01.2020 வரை நடத்தப்பட்டு அதில் ‌தேர்ந்தெடுக்கப்படும்‌ போட்டியாளர்கள்‌ 23.01.2020 முதல்‌ 31.01.2020 வரை நடத்தப்படும்‌ மாவட்ட அளவில்‌ நடத்தப்படும்‌ திறன்‌ போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்‌ வாய்ப்பினை பெறுவார்கள்‌.

மேலும்‌, மாவட்ட திறன்‌ போட்டிகளில்‌ வெற்றிப்பெற்றவ்கள்‌ அடுத்த கட்டமாக நடைபெறவிருக்கும்‌ மாநில திறன்‌ போட்டிகளில்‌ பங்குபெறும்‌ வாய்ப்பினையும்‌, மாநில அளவிலான போட்டிகளில்‌ வெற்றி பெற்றவர்கள்‌ அடுத்த நிலையில்‌ தேசிய அளவிலான போட்டிகளில்‌ பங்குபெறும்‌ வாய்ப்பினையும்‌, தேசிய அளவிலான போட்டிகளில்‌ வெற்றி பெற்றவர்கள்‌ இறுதியாக உலக அளவிலான திறன்‌ போட்டிகளில்‌ பங்குபெறும்‌ பெரிய வாய்ப்பினை பெறுவார்கள்‌.

தாங்கள்‌ விண்ணப்பித்துள்ள தொழிற்பிரிவுக்கு ஏற்ப முன்‌ போட்டி தேர்வு (Screening Test) மற்றும்‌ மாவட்ட அளவிலான திறன்‌ போட்டிகள்‌ நடைபெறும்‌ நாளில்‌ மேற்படி போட்டிகளில்‌ பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்‌. மேலும்‌, இப்போட்டிகள்‌ தொடர்பான விபரங்கள்‌ தங்களது செல்போன்‌ மூலமாகவும்‌ , மின்னஞ்சல்‌ மூலமாகவும்‌ தகவல்‌ தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தங்களுக்கான போட்டி நடைபெறும்‌ அன்று காலை 9.00 மணிக்கு பிறந்த தேதி குறிப்பிட்டுள்ள தகுதியான சான்றிதழ்கள்‌, பாஸ்போர்ட்‌ சைஸ்‌ போட்டோ -2எண்கள்‌ மற்றும்‌ ஆதார்‌ நகல்‌ கண்டிப்பாக உடன்‌ கொண்டு வர வேண்டும்‌.

மேலும்‌ விபரங்களை அறியும்‌ பொருட்டு உதவி இயக்குநர்‌ மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலர்‌, கோவை அவர்களை தொலைபேசி எண்‌ 0422-2642044 , 9566531310 & 9123524155 ஆகிய எண்களிலும்‌ மற்றும்‌ நேரிலும்‌, தொடர்பு கொண்டு அறிந்து‌ கொள்ளலாம்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...