கோவையில் தனியார்‌ பள்ளிகளில்‌ பணிபுரிவதற்கு ஆசிரியர்களுக்கு சிறப்பு தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ - மாவட்ட ஆட்சியர்‌

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின்‌ மூலம்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ பணிபுரிவதற்கான ஆசிரியர்களுக்கு சிறப்பு தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின்‌ மூலம்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ பணிபுரிவதற்கான ஆசிரியர்களுக்கு சிறப்பு தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது;-

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்‌, மூலமாக தனியார்‌ பள்ளிகளில்‌ பணிபுரிவதற்கான ஆசிரியர்களுக்கு சிறப்பு தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 01.02.2020 அன்று காலை 10 மணி முதல்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்‌ ஆசிரியர்களுக்காக மட்டும்‌ சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளதால்‌ ஆசிரியர்‌ பயிற்சி பெற்ற பட்டதாரிகள்‌, முதுநிலை பட்டதாரிகள்‌, உடற்கல்வி ஆசிரியர்கள்‌ என ஆண்‌, பெண்‌ இருபாலரும்‌ தங்களது கல்விச்சான்றுடன்‌ கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்‌. இம்முகாமில்‌ கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. பல முன்னணி தனியார்‌ பள்ளிகள்‌ இம்முகாமில்‌ கலந்து கொண்டு பல்வேறு ஆசிரியர்‌ பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்‌.

இந்த முகாமில்‌ தேர்வு செய்யப்படும்‌ தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை அப்போதே வழங்கப்படும்‌. இம்முகாமில்‌ பணி நியமனம்‌ பெறுபவர்களின்‌ வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில்‌ கலந்து கொள்ள விரும்பும்‌ தனியார்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ மேலைநாடும்‌ மனுதாரர்கள்‌ www.ncs.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. இம்முகாமில்‌ கலந்து கொள்ள அனுமதி முற்றிலும்‌ இலவசம்‌. எனவே, ஆசிரியர்கள்‌ அதிக அளவில்‌ கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்‌. என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...