லட்சுமி நரசிம்ம கவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா; கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்..!

கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில்‌ அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம கவாமி திருக்கோயிலின்‌ மஹா கும்பாபிஷேக விழா 05.02.2020ம்‌ தேதி காலை நடைபெற உள்ளதால்‌ பொதுமக்கள்‌ அதிகளவில்‌ விழாவிற்கு வருகை தருவதால்‌ வாகன போக்குவரத்து காலை 7 மணி முதல்‌ மதியம் 12 மணி வரை கீழ்க்கண்டவாறு மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில்‌ அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம கவாமி திருக்கோயிலின்‌ மஹா கும்பாபிஷேக விழா 05.02.2020ம்‌ தேதி காலை நடைபெற உள்ளதால்‌ பொதுமக்கள்‌ அதிகளவில்‌ விழாவிற்கு வருகை தருவதால்‌ வாகன போக்குவரத்து காலை 7 மணி முதல்‌ மதியம் 12 மணி வரை கீழ்க்கண்டவாறு மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

1) உக்கடம்‌ பகுதியிலிருந்து காந்திபுரம்‌ மற்றும்‌ அவினாசி சாலை செல்ல வேண்டிய வாகனங்கள்‌ சுங்கம்‌ புறவழிச்சாலை, கிளாசிக்‌ டவர்‌ சந்திப்பை அடைந்து செல்ல வேண்டும்‌.

2) உக்கடம்‌ பகுதியிலிருந்து காந்திபார்க்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ தடாகம்‌ சாலை மற்றும்‌ மேட்டுப்பாளையம்‌ சாலை பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள்‌ பேரூர்‌ பைபாஸ் ரோடு, செட்டி வீதி, சலிவன்‌ லீதி வழியாக செல்ல வேண்டும்‌.

3) தடாகம்‌ சாலையிலிருந்து உக்கடம்‌ பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள்‌ காந்திபார்க்‌ பொண்னையராஜபுரம், சொக்கம்புதூர்‌, சிவாலயா சந்திப்பு, பேரூர்‌ புறவழிச்சாலை வழியாக உக்கடம்‌ செல்ல வேண்டும்‌.

4) மேட்டுப்பாளையம்‌ சாலை மற்றும்‌ அவினாசி சாலையிலிருந்து உக்கடம்‌ பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌ கூட்செட்‌ ரோடு, பெரியகடை வீதி, வின்சென்ட்‌ ரோடு வழியாக செல்ல வேண்டும்‌.

5)) டவுன்ஹால்‌ வழியாக உக்கடம்‌ நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும்‌ NH ரோடு ராஜா தியேட்டர் சந்திப்பில் இருந்து வலது புறம்‌ திரும்பி வைசியால் வீதி வழியாக சென்று பேரூர்‌ ரோடு செல்வபுரம்‌ உயர்நிலைப்பள்ளி சாலை சந்திப்பில்‌ இடது புறம்‌ திரும்பி பேரூர்‌ பைபாஸ் சாலை வழியாக உக்கடம்‌ செல்ல வேண்டும்‌.

6) மேற்படி மஹா கும்பாபிஷேக விழாவிற்கு வருகைதரும்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ அவர்களின்‌ வாகனங்களை உக்கடம்‌ புதிய மேம்பால கீழ்‌ பகுதியில்‌ நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7) மேலும்‌ வழி நெடுகிலும்‌ எங்கே வாகனங்கள்‌ நிறுத்த வேண்டும்‌ என்பது குறித்த அறிவிப்புப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதனை கண்டு அதற்கு ஏற்றால்‌ போல்‌ வாகனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள்‌ ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...