ஆழியாறு உப வடிநிலத்தில்‌ புதிய ஆயக்கட்டு பகுதி நீரினை பயன்படுத்துவோர்‌ சங்கங்களின்‌ தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தகவல்

கோவை: பரம்பிக்குளத்தின்‌ நிர்வாக எல்லைக்குட்பட்ட ஆழியாறு உப வடிநிலத்தில்‌ புதிய ஆயக்கட்டு பகுதி நீரினை பயன்படுத்துவோர்‌ சங்கங்களின்‌ தலைவர்‌ மற்றும்‌ ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல்‌ நடத்துவதற்கு, தொடர்புடைய பாசன பகுதிகளின்‌ நில உரிமையாளர்கள்‌ பட்டியல்‌ மற்றும்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ (படிவம்‌ V மற்றும்‌ VA ) ஒருவார காலத்திற்கு விவசாய பெருமக்களின்‌ பார்வைக்காக வைக்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌.

கோவை: பரம்பிக்குளத்தின்‌ நிர்வாக எல்லைக்குட்பட்ட ஆழியாறு உப வடிநிலத்தில்‌ புதிய ஆயக்கட்டு பகுதி நீரினை பயன்படுத்துவோர்‌ சங்கங்களின்‌ தலைவர்‌ மற்றும்‌ ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல்‌ நடத்துவதற்கு, தொடர்புடைய பாசன பகுதிகளின்‌ நில உரிமையாளர்கள்‌ பட்டியல்‌ மற்றும்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ (படிவம்‌ V மற்றும்‌ VA ) ஒருவார காலத்திற்கு விவசாய பெருமக்களின்‌ பார்வைக்காக வைக்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌.

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ மற்றும்‌ ஆனைமலை வட்டத்தில்‌ பரம்பிக்குளம்‌ கோட்டம்‌, பரம்பிக்குளத்தின்‌ நிர்வாக எல்லைக்குட்பட்ட ஆழியாறு உபவடிநிலத்தில்‌ புதிய ஆயக்கட்டு பகுதி நீரினை பயன்படுத்துவோர்‌ சங்கங்களின்‌ தலைவர்‌ மற்றும்‌ ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல்‌ நடத்துவதற்கு, தமிழ்நாடு 2000-ம்‌ ஆண்டு விவசாயிகள்‌ அமைப்பு முறை மேலாண்மைச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 7/2001, விதி 4(3) மற்றும்‌ 32(3)(B) -ன்‌ கீழ்‌ ஆட்சி மண்டல தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்ட வாக்காளர்கள்‌ பட்டியலை இறுதி செய்வதற்கு கீழ்கண்ட கிராமங்களில் உள்ள 

பேரூராட்சி அலுவலகங்கள்‌ மேற்படி கிராமங்களில்‌ உள்ள அரசு பள்ளிக்கூட வளாகங்கள்‌ மற்றும்‌ பொது இடங்களில்‌, தொடர்புடைய பாசன பகுதிகளின்‌ நில உரிமையாளர்கள்‌ பட்டியல்‌ மற்றும்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ (படிவம்‌ V மற்றும்‌ VA ) ஒருவார காலத்திற்கு விவசாய பெருமக்களின்‌ பார்வைக்காக வைக்கப்பட உள்‌ளது.

சம்மதப்பட்ட கிராமங்கள்: 

வேட்டைக்காரன்புதூர்‌, கோட்டூர்‌, காளியாபுரம்‌, ஒடையகுளம்‌ ஆனைமலை மார்ச்ச நாய்க்கன்பாளையம்‌ பெரியபோது, அங்கலகுறிச்சி, தென்சங்கம்பாளையம்‌, சோமந்துரை, தென்சித்தூர்‌, பெத்தநாயக்கனூர்‌, சிங்காநல்லூர்‌, அம்பராம்பாளையம்‌, துறையூர்‌, ஜல்லிபட்டி, அர்த்தநாரிபாளையம்‌, கம்பாலபட்டி, கரியாஞ்செட்டிபாளையம்‌, பில்சின்னாம்பாளையம்‌, பொன்னாபுரம்‌, சமத்தூர்‌, கோட்டாம்பட்டி, நாய்க்கன்பாளையம்‌, வக்கம்பாளையம்‌, ஜமீன்ஊத்துக்குளி, போடிபாளையம்‌, குளத்தூர்‌, சேர்வகாரன்பாளையம்‌, ராசிசெட்டிபாளையம்‌, நல்லூத்துக்குளி, அய்யம்பாளையம்‌, மண்ணூர்‌, திம்பங்குத்து, கொமாரபாளையம்‌, ஆத்துப்பொள்ளாச்சி 

ஊராட்சிமன்ற அலுவலகங்கள்‌: 

கோட்டூர்‌, ஆனைமலை, ஒடையகுளம்‌, வேட்டைக்காரன்புதூர்‌, ஜமீன்‌ ஊத்துக்குளி, சமத்தூர்‌ பேரூராட்சி அலுவலகங்கள்‌. 

எனவே, ஒருவார காலத்திற்குள்ளாக தங்களின்‌ பெயரினை பெயர்‌ பட்டியலில்‌ சரிபார்க்கவும்‌ பெயர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்ப்பதற்கு மறுப்பு தெரிவித்தல்‌ படிவம்‌ VI-லும்‌, பெயரினை சோப்பதற்கு படிவம்‌ VII-லும்‌, பெயரினை நீத்குவதற்கு படிவம்‌ VIII-லும்‌, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்‌. மேற்குறிப்பிட்ட படிவங்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...