கோவையில் இன்று கோனியம்மன்‌ கோவில்‌ தேர்‌ ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்‌!

கோவை: கோவையில் அருள்மிகு கோனியம்மன்‌ கோவில்‌ திருவிழாவை முன்னிட்டு இன்று மதியம்‌ 2 மணிக்கு தேரோட்டம்‌ நடைபெற உள்ளதால்‌ அன்று மதியம்‌ 12.00 மணி முதல்‌ இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்‌ கீழ்க்கண்டவாறு செய்யப்படுகிறது.


கோவை: கோவையில் அருள்மிகு கோனியம்மன்‌ கோவில்‌ திருவிழாவை முன்னிட்டு இன்று à®®à®¤à®¿à®¯à®®à¯‌ 2 மணிக்கு தேரோட்டம்‌ நடைபெற உள்ளதால்‌ அன்று மதியம்‌ 12.00 மணி முதல்‌ இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்‌ கீழ்க்கண்டவாறு செய்யப்படுகிறது.

1, பாலக்காடு மற்றும்‌ பொள்ளாச்சி சாலையிலிருந்து உக்கடம்‌ வழியாக நகருக்குள்‌ வரும்‌ அனைத்து வாகனங்களும்‌ சுங்கம்‌ பைபாஸ்‌, ரயில்வே மேம்பாலம்‌, கிளாசிக்‌ டவர்‌ வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்‌.

2, அவிநாசி சாலை, திருச்சி சாலை பகுதியிலிருந்து வைசியாள்‌ வீதி வழியாக பேரூர்‌ செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும்‌ டவுன்ஹால்‌, உக்கடம்‌ சென்று பேரூர்‌ பைபாஸ்‌ ரோடு வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து பேரூர்‌ செல்ல வேண்டும்‌.

3, பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள்‌ வரும்‌ வாகனங்கள்‌ சலிவன்‌ வீதி வழியாக காந்திபார்க்‌ அடைந்து நகருக்குள்‌ செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்‌.

4, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள்‌ வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில்‌ காலை 8 மணி முதல்‌ இரவு 8 மணி வரை எந்த வாகனமும்‌ நிறுத்த அனுமதி இல்லை.

இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள்‌ அனைவரும்‌ ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...