எர்ணாகுளம்‌ - ராமேஸ்வரம்‌ இடையே மே மற்றும்‌ ஜூன்‌ மாதங்களில்‌ வாராந்திர சிறப்பு ரயில்‌ - தெற்கு ரயில்வே

எர்ணாகுளம்‌ - ராமேஸ்வரம்‌ இடையே பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல்‌, மதுரை, பரமக்குடி வழியாக ஏப்ரல்‌, மே மற்றும்‌ ஜூன்‌ மாதங்களில்‌ வாராந்திர சிறப்பு ரயில்‌ இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளம்‌ - ராமேஸ்வரம்‌ இடையே பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல்‌, மதுரை, பரமக்குடி வழியாக ஏப்ரல்‌, மே மற்றும்‌ ஜூன்‌ மாதங்களில்‌ வாராந்திர சிறப்பு ரயில்‌ இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளத்தில்‌ இருந்து ஏப்ரல்‌ 2, 9, 16, 23, 30, மே 7, 14, 21, 27 மற்றும்‌ ஜூன்‌ 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில்‌ இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள்‌ காலை 7:30க்கு ராமேஸ்வரம்‌ வந்து சேரும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ராமேஸ்வரத்தில்‌ இருந்து ஏப்ரல்‌ 3, 10, 17, 24 மே 1, 8, 15. 22, 29 மற்றும்‌ ஜூன்‌ 5, 12,19, 26 ஆகிய தேதிகளில்‌ மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள்‌ அதிகாலை 4:30க்கு எர்ணாகுளம்‌ சென்றடையும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்‌ இந்த ரயில்கள்‌ பொள்ளாச்சி, உடுமலை. பழனி, ஒட்டன்சத்திரம்‌, திண்டுக்கல்‌, மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம்‌. உச்சிப்பிலி மற்றும்‌ மண்டபம்‌ ஆகிய ரயில்‌ நிலையங்களில்‌ நின்று செல்லும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...