தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள தேநீர்‌ கடைகள்‌ இயங்குவதற்கு இன்று மாலை 6 மணி முதல்‌ மறு அறிவிப்பு வரும்‌ வரை தடை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தேநீர்‌ கடைகளில்‌ தேவையற்ற கூட்டம்‌ கூடுவதைத்‌ தவிர்க்க, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள தேநீர்‌ கடைகள்‌ இயங்குவதற்கு, இன்று (25.3.2020) மாலை 6.00 மணி முதல்‌ மறு அறிவிப்பு வரும்‌ வரை தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை: தேநீர்‌ கடைகளில்‌ தேவையற்ற கூட்டம்‌ கூடுவதைத்‌ தவிர்க்க, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள தேநீர்‌ கடைகள்‌ இயங்குவதற்கு, இன்று (25.3.2020) மாலை 6.00 மணி முதல்‌ மறு அறிவிப்பு வரும்‌ வரை தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

முதலமைச்சர்‌ திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின்‌ செய்தி அறிக்கை - நாள்‌ 25.3.2020

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்றை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நேற்று (24.3.2020) மாலை 6.00 மணி முதல்‌, குற்றவியல்‌ நடைமுறைச்‌ சட்டம்‌ 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அது தொடர்பான ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று (25.3.2020) முதலமைச்சர் தலைமையில்‌ முகாம்‌ அலுவலகத்தில்‌ நடத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சண்முகம்‌, இ.ஆ.ப. அவர்களும்‌, காவல்துறை தலைமை இயக்குநர்‌ திரிபாதி, இ.கா.ப அவர்களும்‌, சென்னை மாநகரக்‌ காவல்‌ ஆணையாள ஏ.கே. விஸ்வநாதன்‌, இ.கா.ப. அவர்களும்‌, பள்ளிக்கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ தீரஜ்குமார், இ.ஆ.ப அவர்களும்‌ பங்கேற்றனர்‌. இக்கூட்டத்தில்‌ கீழ்க்கண்ட முடிவுகள்‌ எடுக்கப்பட்டன.

1. 24.3.2020 அன்று தமிழ்நாடு முழுவதும்‌ 42 பொதுத்தோவு நடைபெற்றது. அத்தேர்வில்‌ சில மாணவர்கள்‌, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால்‌ தங்களால்‌ தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததை கனிவோடு பரிசீலித்து, 24.3.2020 அன்று 42 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும்‌ வேறொரு நாளில்‌ தனியாக தேர்வு நடத்தவும்‌, இத்தேர்வுக்கான தேதியை பின்னா்‌ அறிவிக்கவும்‌ உத்தரவிட்டேன்‌.

2. மேலும்‌, கொரோனா நோயை தடுக்கும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள்‌ இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில்‌ உள்ளது. இதனால்‌, தமிழ்நாட்டில்‌ 1-ம்‌ வகுப்பு முதல்‌ 9-ம்‌ வகுப்பு வரை உள்ள மாணவர்களால்‌ இறுதித்‌ தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில்‌ கொண்டும்‌, மாணவர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ 9-ம்‌ வகுப்பு வரை உள்ள மாணவர்கள்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்‌ கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன்‌.

3. தேநீர்‌ கடைகளில்‌ தேவையற்ற கூட்டம்‌ கூடுவதைத்‌ தவிர்க்க, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள தேநீர்‌ கடைகள்‌ இயங்குவதற்கு, இன்று (25.3.2020) மாலை 6.00 மணி முதல்‌ மறு அறிவிப்பு வரும்‌ வரை தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...