தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு தமிழக அரசு அனுமதி!

கோவை: தமிழகத்தில் தேநீர் கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் தேநீர் கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிலைமைக்கு ஏற்றவாறு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேநீர் கடைகளை திறக்க அனுமதி உள்ளிட்ட மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், 11.5.2020 திங்கள்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேனீர் கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடை பிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேநீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...