சென்னை தவிர தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதி..!

கோவை: சென்னை தவிர தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நாளை முதல் முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


கோவை: சென்னை தவிர தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நாளை முதல் முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் முடி திருத்தகங்களை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களையும் பணியமர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முடி திருத்தகங்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதோடு, சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாரேனும் வந்தால் கடைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்குவதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் முடி திருத்தக உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதோடு முடி திருத்தகம் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கடைகளில் குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது எனவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 19ம் தேதி முதல் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...