சென்னை தவிர்த்து தமிழக அரசு பிற பகுதிகளுக்கு அறிவித்துள்ள முக்கிய தளர்வுகள் என்ன?

சென்னை தவிர்த்து தமிழக அரசு பிற பகுதிகளுக்கு அறிவித்துள்ள முக்கிய தளர்வுகள் என்ன?



சென்னை: சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர மற்ற பகுதிகளுக்கு முக்கிய தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் - (Except Containment Zones) தவிர்த்து, கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் ஜூன் 1 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

பொது பேருந்து போக்குவரத்து

  • மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.


மண்டலங்கள்

மண்டலம் 1: கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம் 2: தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி 

மண்டலம் 3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் 4: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம் 5: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி 

மண்டலம் 7: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு 

மண்டலம் 8: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

பொது போக்குவரத்து

  1. மண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்கும், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

  2. மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.

  3. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் (Stage carriers) இயக்க அனுமதிக்கப்படுகிறது.

  4. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.


இ-பாஸ்

  1. மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.

  2. அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

  3. அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.

  4. அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

  5. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


தொழில் நிறுவனங்கள்

  1. 100% பணியாளர்களுடன் à®¤à¯Šà®´à®¿à®²à¯ நிறுவனங்கள் à®‡à®¯à®™à¯à®• அனுமதிக்கப்படுகிறது.

  2. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

  3. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள், வீட்டில் இருந்தபடி (work from home) பணிபுரிவதை ஊகுவிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. வணிக வளாகங்கள் à®¤à®µà®¿à®°à¯à®¤à¯à®¤à¯, அனைத்து நகை, ஜவுளி மற்றும் பெரிய கடைகள், 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். எனினும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

  5. குறிப்பாக, கடைகளில், குளிர்சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக்கூடாது.

  6. டீ கடைகள், உணவு விடுதிகள்

  7. மேலும், ஜூன் 7 ஆம் தேதி வரை டீ கடைகள், உணவு விடுதிகள் ( பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

  8. மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும்,

  9. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

  10. குறிப்பாக, உணவகங்களில் குளிர்சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

  11. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் à®µà®´à®™à¯à®• அனுமதிக்கப்படுகிறது.

  12. வாடகை மற்றும் டாக்ஸி à®µà®¾à®•னங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...