தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கோவை: தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்டு சீருடைப் பணியாளர் துறையில் உள்ள 10,906 காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



கோவை: தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்டு சீருடைப் பணியாளர் துறையில் உள்ள 10,906 காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.52 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருத்தல் அவசியம். மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியினைப் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

01.07.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 01,07,2020 அன்று 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டவராகவும், எஸ்.சி, எஸ்டி பிரிவினர் 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு துறைகளுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கும் ரூ.18,200 முதல் ரூ.52,900 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தமிழக அரசின் சீருடைப் பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tnusrbonline.org/ அல்லது http://www.tnusrb.tn.gov.in/about_us.htm என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...