வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ- பாஸ் முறை கட்டாயம், ஒரு நாளைக்கு 400 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் - கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ- பாஸ் முறை கட்டாயம் எனவும், ஒரு நாளைக்கு 400 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கோவை: வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ- பாஸ் முறை கட்டாயம் எனவும், ஒரு நாளைக்கு 400 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், கோவை மட்டும் பிற மாவட்டங்களில் இருந்து வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால், அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் வாகனங்களை கண்காணிக்க சுகாதாரத்துறை மூலம் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் வால்பாறை செல்ல ஆர்வம் காட்டி வருவதால், தினந்தோறும் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.



இதையடுத்து, இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கு ராசாமணி, ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக கொரானா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கோவை மாவட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் சுய பாதுகாப்போடும், விழிப்புடனும் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில், நோய் தொற்று குறைந்த அளவே காணப்படுவதாகவும், இருந்தாலும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, இன்று முதல் வால்பாறைக்கு சுற்றுலா வரும் வெளி மாவட்ட பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். வால்பாறைக்கு நாள் ஒன்றுக்கு 400 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், என்று தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...