தீபாவளிக்கு கோவை கோட்டத்தில் இருந்து 436 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளிக்கு கோவை கோட்டத்தில் இருந்து 436 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கோட்டத்தில் இருந்து 436 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் வருகின்ற 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு, கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 12ம் தேதி முதல் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட கோவை மாவட்டத்தில் இருந்து 186 பேருந்துகள், நீலகிரி மாவட்டத்தில் இருந்து 50, ஈரோடு மாவட்டத்தில் இருந்து 110, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 90, என மொத்தமாக 436 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன."

மேலும், தீபாவளி முடிந்து பணிகளுக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு வசதியாக 16ம் தேதி வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும், என்றனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...