வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் சிறப்பு முகாம் - கோவை ஆட்சியர் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்,செய்தல், மற்றும் திருத்தம், மேற்கொள்ள இம்மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இதே போன்ற முகாம், கடந்த நவம்பர் மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெற்றது. அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கணினி மயமாக்கப்பட்டு கோவை மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தங்கள் விண்ணப்பங்களின் விவரத்தினை https://cambatore.nic.in/election department/என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். 

விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அறிக்கையில் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...