தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலை 2020-21 ஆண்டுக்கான முதுநிலை இணையதள மாணவர்‌ சேர்க்கை ஆரம்பம்..!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழத்தில்‌ முதுநிலை பட்டப்படிப்பில்‌ 32 துறைகளுக்கும்‌, முனைவர்‌ பட்டப்படிப்பில்‌ 29 துறைகளுக்குமான இணையதள மாணவர்‌ சோக்கையை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ குமார்‌ இன்று (08.12.2020) துவக்கிவைத்தார்‌.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழத்தில்‌ முதுநிலை பட்டப்படிப்பில்‌ 32 துறைகளுக்கும்‌, முனைவர்‌ பட்டப்படிப்பில்‌ 29 துறைகளுக்குமான இணையதள மாணவர்‌ சோக்கையை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ குமார்‌ இன்று (08.12.2020) துவக்கிவைத்தார்‌.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்‌ 31.12.2020 மற்றும்‌ நுழைவுத்தேர்வு நடைபெறும்‌ நாள்‌ 12.01.2021 என்று முனைவர்‌ ஜா.சா. கென்னடி முதன்மையர்‌ (பட்டமேற்படிப்பு), தெரிவித்தார்‌.

முதுநிலை பாடப்பிரிவுகள் 

வேளாண்‌ பொருளியல்‌, வேளாண்‌ பூச்சியியல்‌, வேளாண்‌ விரிவாக்கம்‌, வேளாண்‌ நுண்ணுயிரியல்‌, உழவியல்‌, பயிர்‌ வினையியல்‌, மரபியல்‌ மற்றும்‌ தாவர இனப்பெருக்கம்‌, நூற்புழுவியல்‌, பயிர்‌ நோயியல்‌, விதை ௮றிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌, மண்ணியல்‌ மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌, தொலையுணர்வு மற்றும்‌ புவியியல்‌ தகவல்‌ அமைப்பு, உயிரி தொழில்நுட்பவியல்‌, உயிர்‌ தகவலியல்‌, சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌, வேளாண்‌ வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி, நானோ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ பாடப்பிரிவுகளுக்கும்‌, தோட்டக்கலை (4), வேளாண்மைப்‌ பொறியில்‌ (4), வனவியல்‌ (3), சமுதாய அறிவியல்‌ (1) ஆகிய துறைகளுக்கு மாணவர்‌ சேர்க்கை துவங்கப்பெற்றது.

முனைவர்‌ பட்டப்படிப்புக்கான பாடப்பிரிவுகள் 

வேளாண்‌ பொருளியியல்‌, வேளாண்‌ பூச்சியியல்‌, வேளாண்‌ விரிவாக்கம்‌, வேளாண்‌ நுண்ணுயிரியல்‌, உழவியல்‌, பயிர்‌ வினையியல்‌, மரபியல்‌ மற்றும்‌ தாவர இனப்பெருக்கம்‌, நூற்புழுவியல்‌, பயிர்‌ நோயியல்‌, விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌, மண்ணியல்‌ மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌, உயிரி தொழில்நுட்பவியல்‌, சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌, வேளாண்‌ வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, நானோ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌ பாடப்பிரிவுகளுக்கும்‌, தோட்டக்கலை (4), வேளாண்மைப்‌ பொறியில்‌ (4), வனவியல்‌ (1), சமுதாய அறிவியல்‌ (1) ஆகிய துறைகளுக்கும்‌ மாணவர்‌ சோக்கை துவங்கப்பெற்றது.

இணைய வழி மாணவர் சேர்க்கை

மாணவர்‌ சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்துகொள்ள www.admissionsatpgschooltnau.ac.in இணையதளத்தில்‌ உள்ள தகவல்‌ கையேட்டை பதிவிறக்கம்‌ செய்து தெரிந்து கொள்ளலாம்‌.

மேலும்,‌ விவரங்களுக்கு 0422-6611261, 0422-6611461, ஆகிய தொலைபேசி உதவிச்‌ சேவை எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...