கோவை, ஈரோடு உள்பட 14 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்!

கோவை: தமிழகம் முழுவதும் 14 டி.எஸ்.பி இடமாற்றம் செய்து டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: தமிழகம் முழுவதும் 14 டி.எஸ்.பி இடமாற்றம் செய்து டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து டி.ஜி.பி திரிபாதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக் காப்பக டி.எஸ்.பி பார்த்திபன் கோவை நகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும். கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சௌந்தரராஜன் ஈரோடு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த டி.எஸ்.பி சௌந்திரராஜன் பென்னாகரம் டி.எஸ்.பி ஆக மாற்றப்பட்டுள்ளனர்.

தர்மபுரி பென்னாகரம் டி.எஸ்.பி மேகலா தமிழ்நாடு போலீஸ் அகாடமி சென்னை டி.எஸ்.பி ஆகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமி டி.எஸ்.பி ஜான் விக்டர் சென்னை துரைப்பாக்கம் உதவி ஆணையராகவும், இந்தப் பதவியில் இருந்த லோகநாதன் திருவள்ளூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பி ஆகவும், இந்த பதவியில் இருந்த அசோகன் சென்னை எஸ்.ஆர்.எம்.சி உதவி ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

எஸ்.ஆர்.எம்.சி உதவி ஆணையர் சம்பத் பரங்கிமலை உதவி ஆணையராகவும், பரங்கிமலை உதவி ஆணையர் ஜீவானந்தம் சென்னை மாநகர போலீஸ் பயிற்சி பள்ளி உதவி ஆணையராகவும், சென்னை துறைமுகம் உதவி ஆணையர் ராஜகோபால் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி உதவி ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி அனுமந்தன் வண்டலூர் டி.எஸ்.பி. ஆகவும், வண்டலூர் டி.எஸ்.பி ரவிச்சந்திரன் திருத்தணி டி.எஸ்.பி ஆகவும், திருத்தணி டி.எஸ்.பி குணசேகரன் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆகவும், திருவள்ளூர் குற்ற விசாரணை பிரிவு டி.எஸ்.பி ஜாஹீர் உசேன் தூத்துக்குடி போதைப்பொருள் உளவுத்துறை பிரிவு டி.எஸ்.பி ஆகவும் பணிமாற்றம் செய்யப்படுகின்றன.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...