சேலத்துக்கு இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்!

கோவை: அரக்கோணத்தில் இருந்து சேலத்துக்கு இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.


கோவை: அரக்கோணத்தில் இருந்து சேலத்துக்கு இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து சேலத்துக்கு இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் முன்பைவிட வேகமாகவும் குறைந்த மின்சக்தியிலும் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் 55 பேர் அமர்ந்துகொண்டும், 171 பேர் நின்றுகொண்டும் பயணிக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும். இந்த ரெயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.

மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ரெயிலில் முதல் பெட்டியில் ஏறினால் கடைசி பெட்டி வரை செல்லலாம். ஜி.பி.எஸ். வசதி உள்ளதால் அடுத்து வரும் நிறுத்தங்கள் பற்றிய தகவல்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். இந்த ரெயிலில் பயணிக்க முதல் வகுப்புக்கு 585 ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு 115 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இத்தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...