போலி வலைதளங்கள் குறித்து எச்சரிக்கை..! ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

கோவை: நீங்கள் ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால், கவனமாக இருங்கள், ஏனென்றால் இந்த நேரத்தில் இணையத்தில் www.passportonlineindia.com போன்ற பல போலி வலைத்தளங்கள் இயங்குகின்றன.



கோவை: நீங்கள் ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால், கவனமாக இருங்கள், ஏனென்றால் இந்த நேரத்தில் இணையத்தில் www.passportonlineindia.com போன்ற பல போலி வலைத்தளங்கள் இயங்குகின்றன.

குறிப்பாக, அவைகள் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வலைத்தளத்தைப் போலவே இருக்கின்றன, ஆனால், அவை உண்மையில் போலியானவை. இந்த வலைத்தளங்கள் மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுகின்றன.

இதனிடையே, போலி பாஸ்போர்ட் ஒழிப்பு நடவடிக்கைகளில் ‘கியூ’ பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல காலமாக பாஸ்போர்ட் பெயரில் மக்களை ஏமாற்றி வந்த பல போலி தளங்களின் பெயர்களை பாஸ்போர்ட் துறை வெளிப்படுத்தியுள்ளது,

எனவே, www.passportonlineindia.com போன்ற போலியான பாஸ்போர்ட் வலைத்தளங்களிடம் இருந்து விலகி, பொதுமக்கள் விலகி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைவரும் தங்களது விண்ணப்பத்தை www.passportindia.gov.in என்று அதிகாரப்பூர்வ வலைதளத்தில் எங்களது அதிகாரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...