பாலக்காடு டவுன் - திருச்சி சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கோவை: பாலக்காடு டவுன் - திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கோவை: பாலக்காடு டவுன் - திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாலக்காடு டவுன் - திருச்சி சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாள பொறியியல் மற்றும் தட பராமரிப்பு பணிக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 06844 பாலக்காடு டவுன் - திருச்சி சிறப்பு ரயில், பிப்ரவரி 2-ம் தேதி வரை பாலக்காடு டவுன் - ஈரோடு இடையே மட்டுமே இயங்கும். இந்த ரயில் ஈரோடு - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் வண்டி எண் 06843 திருச்சி - பாலக்காடு டவுன் சிறப்பு ரயில் பிப்ரவரி 3-ம்தேதி வரை திருச்சி - ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு - பாலக்காடு டவுன் இடையே மட்டுமே இயங்கும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...