பயணிகள் ரயில் ஏப்ரல் மாதம் முதல் முழு செயல்பாட்டிற்கு வரும் என்ற தகவல் தவறு - ரயில்வே நிர்வாகம்

கோவை: கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில்கள் செயல்பாடு முற்றிலும் குறைக்கபட்டிருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு படிப்படியாக குறைந்து வருவதால், ஏப்ரல் மாதம் முதல் அனைத்து பயணிகள் ரயிலும் மீண்டும் செயல்படுத்தப்படும் என பரப்பப்படும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம், என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை பயணிகள் ரயிலை முழுமையாக இயக்கும் தேதி நிர்ணயிக்கப்படாத நிலையில், யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் பரப்புவதை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், தற்சமயம் அத்தியாவசிய தேவைக்கான சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், நோய் பாதிப்புகள் குறைந்ததையடுத்து, பயணிகள் இரயில்கள் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அதிகாரபூர்வமாக எந்த தேதியிலிருந்து முழு இரயில் சேவைகள் தொடங்கும் என்பது விரையில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...